Princiya Dixci / 2017 ஜூன் 05 , பி.ப. 04:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
16 வயதுடைய தனது மூத்த மகளை வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தையை (41 வயது), எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, தம்புத்தேகம நீதவான் சஞ்ஜீவணி ரத்நாயக்க, இன்று (05) உத்தரவிட்டார்.
அநுராதபுரம், எப்பாவெல பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் ஒரு வேலை நிமித்தம் வீட்டிலிருந்து தாயார் வெளியில் சென்ற சந்தர்ப்பத்தில், தந்தையால் குறித்த சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளாரெனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
நடந்த சம்பவத்தை யாரிடமும் கூறக் கூடாது எனவும் இல்லாவிடின் கொலை செய்து விடுவதாகவும் தந்தை, மகளை அச்சுறுத்தியுள்ளார்.
எனினும், இவ்விடயம் குறித்து மகள் தாயாரிடம் தெரிவித்ததுக்கமைய, எப்பாவெல பொலிஸ் நிலையத்தில், தாயார் முறையிட்டுள்ளார்.
16 வயதுடைய தனது மூத்த மகளை, தனது கணவர் வன்புணர்வுக்கு உட்படுத்தியுள்ளதாக, இரு பிள்ளைகளின் தாயாரினால் மேற்கொள்ளப்பட்ட குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக, எப்பாவெல பொலிஸார் தெரிவித்தனர்.
முறைப்பாட்டின் அடிப்படையில், கட்டுமானத் தொழில் புரியும் குறித்த தந்தை, கடந்த 3ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தாயின் பாதுகாப்பின் கீழ், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் மருத்துவப் பரிசோதனைக்காக சிறுமியை அனுமதிக்குமாறும் தம்புத்தேகம நீதவான் உத்தரவிட்டார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, எப்பாவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
28 Oct 2025
28 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Oct 2025
28 Oct 2025