2025 மே 07, புதன்கிழமை

மதுபானம் தயாரித்தவருக்கு பிணை

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 10 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், வாரியபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புபிபோவ பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை பிணையில் விடுவித்த நீதவான், அவரை எதிர்வரும் 17ஆம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு  உத்தரவிட்டுள்ளார்.

மதுபானம் தயாரித்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேகநபரை, நேற்று புதன்கிழமை (09) வாரியபொல பொலிஸார் கைது செய்திருந்தனர். இதனையடுத்து சந்தேகநபரை, இன்று வியாழக்கிழமை (10) வாரியபொல மாவாட்ட நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் அஜர்ப்படுத்தினர்.

இதன்போது, சந்தேக நபரை, பிணையில் விடுதலை செய்த நீதவான், எதிர்வரும் 17ஆம் திகதி நீதிமன்றத்துக்கு சமுகமளிக்குமாறு உத்தரவிட்டார். 

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து 1,130 லீற்றர் கோடா, 33.75 லீற்றர் மதுபானம், எரிவாயு அடுப்பு, சிலிண்டர் மற்றும் செப்புச் சுருள் என்பவற்றைப் பொலிஸார் கைப்பற்றியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X