2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மது, போதைப்பொருளுக்கு எதிராக கற்பிட்டியில் விழிப்புணர்வு

Editorial   / 2017 ஜூலை 10 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டியில் இயங்கி வரும் எச்.என்.சி. மாணவர் கழகம் மற்றும் அபுசால் எகடமி என்பன இணைந்து ஏற்பாடு செய்த மது மற்றும் போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு ஊர்வலமொன்று, கற்பிட்டியில் நேற்று இடம்பெற்றது.

 

"போதைப்பொருளற்ற ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவோம்" எனும் கருப்பொருளில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில், எச்.என்.சி. கழக அங்கத்தவர்கள் உட்பட இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் எனப் பெரும் எண்ணிக்கையிலானோர் கலந்துகொண்டனர்.

கற்பிட்டி அல்-அக்‌ஷா தேசியப் பாடசாலை சந்தியில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட குறித்த ஊர்வலம், கற்பிட்டி கடற்படை முகாம் வரை சென்று, மீண்டும் ஆரம்பித்த இடத்தை வந்தடைந்தது.

"சாராயம் உனக்கு சாவுமணி அடிக்கும்", " போதை உன் மதியை மயக்கும், மயங்கி விடாதே" மற்றும் " போதை வீட்டுக்கும், நாட்டிற்கும் கேடு" இது போன்ற போதைப்பொருள் பாவனைக்கு எதிரான பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு இளைஞர்களும் பொதுமக்களும் ஊர்வலமாகச் சென்றனர்.

அத்துடன், மது மற்றும் போதைப்பொருள் பாவனையால் சமூகச் சீரழிவு, குடும்பக் கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பு என்பன தொடர்பில் ஒளிப்பதிவு செய்யப்பட்ட குறுந்திரைப்படங்கள் பொதுமக்களுக்கு இதன்போது காட்சிப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .