2025 மே 06, செவ்வாய்க்கிழமை

மனைவியைக் கொலை செய்து விட்டு தப்பிய கணவன் கைது

Princiya Dixci   / 2015 டிசெம்பர் 03 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

தனது மனைவியைத் துப்பாக்கியால் சுட்டும் கத்தியாலும் குத்தியும் கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற கணவனை, நேற்று புதன்கிழமை (02) இரவு 7.15 மணியளவில் கைது செய்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். 

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநேரி சிரிகம்பள எனும் பிரதேசத்திலே புதன்கிழமை இடம்பெற்ற இச்சம்பவத்தில் சிரிகம்பள கொலணி பிரதேசத்தைச் சேர்ந்த திமுது தக்சிலா (வயது 29) எனும் இரு பிள்ளைகளின் தாயே கொல்லப்பட்டுள்ளார். 

கொலை செய்யப்பட்ட பெண், தனது கணவருடன் சில காலமாக இத்தாலியில் தொழில்புரிந்து வந்துள்ளதாகவும் அவர்களது இரு பிள்ளைகளும் பத்து வயதுக்குட்பட்டவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இத்தாலியில் வசித்த காலத்தில் இவ்விருவருக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர், விடுமுறையில் ஒரு மாதத்துக்கு முன்னர் இத்தாலியிருந்து தனியாக நாடு திரும்பியிருந்துள்ளதுடன், கொலை செய்யப்பட்ட பெண், தனது இரு பிள்ளைகளுடன் கடந்த திங்கட்கிழமை நாடு திரும்பியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
 
இந்நிலையில் சம்பவ தினம், தனது மனைவியை சந்தித்து தமது குடும்பத் தகறாற்றை மறந்து மீண்டும் இணைந்து வாழுமாறு அமைத்துள்ளார்.  இவ்வேண்டுகோளை மனைவி நிராகரித்கவே அவரை, தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் குத்தியும் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர். 

இச்சம்பவத்தை அறிந்துகொண்ட வென்னப்புவ பொலிஸார், உடனடியாகச் செயற்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு தப்பிச் சென்ற சந்தேக நபரைக் கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்த கைத்துப்பாக்கியையும் கத்தியையும் கைப்பற்றியுள்ளர். 

கைப்பற்றப்பட்ட சிறிய வகை கைத்துப்பாக்கியை சந்தேகநபர் இத்தாலியிருந்து கொண்டு வந்திருப்பதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.   

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார், மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X