Thipaan / 2015 நவம்பர் 14 , மு.ப. 05:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம். ஹிஜாஸ்
புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ஆராச்சிகட்டுவ பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் வீசிய பலத்த காற்று காரணமாக, பாரிய மரமொன்று வீழ்ந்ததனால் மூவர் காயமடைந்துள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
வீதியில் சென்று கொண்டிருந்த சிறியரக உழவு இயந்திரத்தின் மேல் குறித்த மரம் வீழ்ந்ததினாலேயே இவ் அனர்ததம் ஏற்பட்டுள்ளது. இதனால் புத்தளம் - சிலாபம் வீதி போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக தப்போவ, தெதுறு ஓயா மற்றும் இராஜாங்கனை ஆகிய மூன்று நீர்த் தேங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.
தப்போவ நீர்த்தேக்கத்தின் 8 வான்கதவுகளும் இராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகளும் மற்றும் தெதுறு ஓயாவின் 2 வான் கதவு வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டுள்ளன.
கலா ஓயா பெருக்கெடுத்துள்ளதால் எலுவான்குளம் பகுதியில் அமைந்துள்ள கலா ஓயா பாலத்தின் மேல் வெள்ள நீர் பாய்ந்து செல்கிறது.
இதனால், இந்த வீதியின் ஊடான மன்னாருக்கான போக்குவரத்து தொடர்ந்து தடைப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.



21 minute ago
28 minute ago
2 hours ago
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
2 hours ago
05 Nov 2025