Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2016 மார்ச் 08 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.என்.எம். ஹிஜாஸ்
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரப்பிரசாதங்களை அள்ளி வழங்கி ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி கட்சிகளைப் பிளவுப்படுத்திய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, இன்று சுதந்திரக் கட்சித் தலைமைத்துவப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரும் நாய் வாலை நிமிர்தத முடியாது போல் தற்போது சுதந்திரக் கட்சியியைப் பிளவுப்படுத்துகிறார்
அவ்வாறு முன்னாள் ஜனாதிபதி, சுதந்திரக் கட்சியினை பிளவுபடுத்தினால் ஐக்கிய தேசியக் கட்சியாகிய நாம், அவருக்கு நன்றி சொல்ல வேண்டுமென புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ராஜாங்க அமைச்சருமாகிய பாலித ரங்க பண்டார, நேற்று திங்கட்கிழமை (07) தெரிவித்தார்.
நீண்ட காலமாக சேதமுற்றிருந்த மதுரங்குளி - தொடுவாவ வீதியினை 30 மில்லியன் ரூபாய் செலவில் காபட் வீதியாக புனரமைக்கும் பணிகளை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே ராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
மதுரங்குளி - தொடுவாவ வீதியின் இரண்டாம் கட்டமாக 4.5 கிலோ மீற்றர் தூரம் காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் உரையாற்றி ராஜாங்க அமைச்சர் பாலித ரங்க பண்டார தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வீதி காபட் இடப்பட்டது. அவற்றின் செலவீனங்களில் 65 சதவீதம் மாத்திரம் செலவிடப்பட்டதுடன், 35 சதவீதம் தமது பைக்குள் போட்டுக்கொண்டார்கள்.
இதன் காரணமாக குறுகிய காலங்களுக்குள் அக் காபட் வீதிகள் சேதமுற்றுள்ளதைக் காணக்கூடியதாகவுள்ளது. எனவே, தற்போது காபட் இடப்படும் வீதி சிறப்பாக காபட் இடப்பட வேண்டும். இதனை வீதி அபிவிருத்தி அதிகாரிகள் அவதானிப்பார்களென நான் நினைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
20 minute ago
33 minute ago