Editorial / 2017 ஒக்டோபர் 11 , பி.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
டப்ளியூ. எம். பைசல்
கெகிராவ, ஹொராப்பொல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் மரணமடைந்துள்ளாரென, கெகிராவ பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம், ஹோராப்பொல முஸ்லிம் கிராமத்தில் நேற்றிரவு (10) 11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கல்முனை பதியூதீன் மஹ்மூத் மகளிர் வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி கற்கும் பாத்திமா ஹனான் எனும் மாணவியே, இவ்வாறு மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார்.
குறித்த மாணவி, கல்முனையில் கல்வி கற்கும் போது, டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்டு, உடல் பலவீனமான நிலைமையில், வைத்திய ஆலோசனைப்படி வீட்டிலிருந்து ஓய்வெடுக்கும் நிலைமையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவ தினம் இரவு தனது அறையில் படித்து விட்டு, தூங்க ஆயத்தமாகிக் கொண்டு, மின்விசிறியை அணைப்பதற்கு முயற்சித்த வேளையிலே இவர் மின்சாரத் தாக்குதலுக்குள்ளாகி மரணமடைந்துள்ளாரெனத் தெரிய வந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை, கெகிராவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .