2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

முச்சக்கர வண்டியை திருடியவர் கைது

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், கொரயாவத்தை பிரதேசத்தில் முச்சக்கர வண்டியொன்றைத் திருடிய  கொரயாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர், நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.

சிலாபம், பிட்டிபன பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்குச் சொந்தமான குறித்த முச்சக்கர வண்டி, வீட்டின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போது, நேற்று முன்தினம் திருடப்பட்டுள்ளது.

அன்றைய தினம், இரவு நேர ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரிகள், சந்தேகத்துக்கிடமான வகையில் ஒருவர் முச்சக்கர வண்டியைத் தள்ளிக் கொண்டு செல்வதை அவதானித்து, அது தொடர்பில் அவரிடம் விசாரணை செய்துள்ளனர்.

அதன்போது, முச்சக்கர வண்டியின் உரிமை தொடர்பான தகவல்களை உறுதிப்படுத்த அந்நபர் தவறியதால் ,அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது முச்சக்கர வண்டிக்குத் தேவையான பாகங்களைக் கழற்றிக் கொள்வதற்காகவே, குறித்த முச்சக்கர வண்டியைக் கடத்தியதாக, கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர், பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X