Editorial / 2017 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின், முஹம்மது முஸப்பிர்
புத்தளம், கொட்டுக்கச்சிய பிரதேசத்தில் முதலையை இறைச்சிக்காக அறுத்த குற்றச்சாட்டின் கீழ், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும், தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதப் பணம் செலுத்துமாறு புத்தளம் மாவட்ட நீதவான், திங்கட்கிழமை உத்தரவிட்டார்.
கொட்டுக்கச்சி பிரதேசத்தில் மீஓயா ஆற்றுப் பகுதிகளில் வாழும் அரிய வகையிலான முதலை ஒன்றைப் பிடித்தே, இச்சந்தேக நபர்கள் அதனை அறுத்து இறைச்சியாக்கியுள்ளனரென, புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்தில் முதலையை இறைச்சிக்காக அறுத்த குற்றச்சாட்டின் கீழ், ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இருவரும், புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புத்தளம், கொட்டுக்கச்சிய, அதுல்கொட பிரதேசத்தில் முதலையை பிடித்து இறைச்சிக்காக அறுப்பதாக, குறித்த பிரதேச சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள், புத்தளம் பொலிஸாலுக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
குறித்த தகவலின் அடிப்படையில், அந்த பிரதேசத்தில் சுற்றிவளைப்பை மேற்கொண்ட புத்தளம் பொலிஸார், முதலையை அறுத்த இருவரை சந்தேகர்தின் பேரில் கைதுசெய்ததுடன், இறைச்சிக்காக அறுக்கப்பட்டதாக ௯றப்படும் முதலையையும் கைப்பற்றினர்
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் நேற்றை தினம் புத்தளம் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது, அவ்வருவரையும் தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதப்பணம் செலுத்துமாறு, நீதவான் உத்தரவிட்டார்.
புத்தளம் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025