2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு அருகில் தீ

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஓகஸ்ட் 19 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம், முன்னேஸ்வரம் ஆலயத்துக்கு அருகில் அமைந்துள்ள “ரதா பதஹ” என்ற சதுப்பு நிலப்பரப்பில் நேற்று நண்பல் ஏற்பட்ட திடீர் தீயால், சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு முற்றாகத் தீக்கிரையாகியுள்ளதாக, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர். 

மழை காலங்களில் நீரில் மூழ்கும் இந்த நிலப்பரப்பினுள் இயற்கையாகவே வளரும் பண், அப்பிரதேசத்தில் வசிக்கும் சிலரது வாழ்வாதாரத்துக்குப் பெரும் பங்களிப்பை வழங்கி வந்தது.

எனினும், தற்போது நிலவும் வரட்சி காரணமாக, இந்த பண் காய்ந்து வரண்டு போயிந்தமை தீ வெகுவாகப் பரவுவதற்குக் காரணமாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு ஏற்பட்ட தீயை, சிலாபம் நகர சபையின் தீயணைக்கும் பிரிவினரும் சிலாபம் பிரதேச செயலக அதிகாரிகளும் இணைந்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்தத் தீப்பரவலால் ஏற்பட்ட புகை மண்டலத்தால், சிலாபம் - குருநாகல் வீதியில் வாகனப் போக்குவரத்துக்கு நேற்று மாலை வரை சிறிய தடங்கல்கள் ஏற்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X