2025 ஒக்டோபர் 25, சனிக்கிழமை

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வு

எம்.யூ.எம். சனூன்   / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்றம் மற்றும் புத்தளம் நகர சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் புத்தளம் தொகுதிக்குட்பட்ட முன்பள்ளி ஆசிரியைகளுக்கான முழு நாள் செயலமர்வொன்று, புத்தளம் சவீவபுரத்தில் அமைந்துள்ள முன்பிள்ளை பருவ அபிவிருத்தி அதிகார சபையின் புத்தளம் மாவட்ட மையத்தில் நேற்று (17) நடைபெற்றது.

புத்தளம் நகர சபை, புத்தளம் பிரதேச சபை, வண்ணாத்திவில்லு பிரதேச செயலகம் மற்றும் கருவலகஸ்வெவ பிரதேச செயலகம் ஆகிய பிரிவுகளுக்குட்பட்ட 150க்கும் மேற்பட்ட தமிழ், சிங்கள மொழி மூல முன்பள்ளி ஆசிரியைகள், இந்தச் செயலமர்வில் கலந்துகொண்டனர்.

முன்பள்ளி மாணவர்கள் மத்தியில் கலை, கலாசாரத் துறையை மேம்படுத்தும் நோக்கில், இந்நிகழ்வில் செயன்முறை பயிற்சிகள் வழங்கப்பட்டன.

புத்தளம் மாவட்ட முன்பிள்ளை பருவ அபிவிருத்தி மன்ற பொறுப்பாளர் ரூபிக்கா தலைமையில் நடைபெற்ற செயலமர்வின் ஆரம்ப நிகழ்வில் புத்தளம் நகர சபையின் நிர்வாக அதிகாரி எச்.எம். சபீக், சிறுவர் கல்வி ஆலோசகர் இந்திக்க செனவிரத்ன, அங்கர் நிறுவன அதிகாரி பிரசாத் பீரிஸ், வாரியபொல முன்பள்ளி ஆசிரியை இமல்கா, வண்ணாத்திவில்லு பிரதேச முன்பள்ளி பொறுப்பாளர் புஞ்சி பண்டா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X