Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2017 ஜூலை 03 , பி.ப. 02:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர், ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
யுத்தத்தில் ஈடுபட்ட படைவீரர்களின் மூவாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள், வீடுகள் இல்லாதிருப்பதாக, வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஆனமடு, கம்உதாவ பூமியில் நிர்மாணிக்கப்படவுள்ள “யுத்தவீரர் நீரோ கிராமம்” வீடமைப்புத் திட்டத்துக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“யுத்த வீரர்கள் நாட்டுக்காக அர்ப்பணிப்புச் செய்யாதிருந்தால் இன்று எம்மால் சுதந்திரமாக இவ்வாறான கூட்டங்களை நடத்துவதற்கு சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்காது. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சராக நாடு முழுவதிலும் வீடமைப்புத் திட்டங்களை என்னால் உருவாக்கவும் சந்தர்ப்பம் கிடைத்திருக்காது. அவர்கள் ஏற்படுத்தித் தந்த சுதந்திரத்தின் காரணமாக நாட்டு மக்கள் இன்று வீதியில் அச்சமின்றி சுதந்திரமாகப் பயணிக்க முடிந்திருக்கின்றது.
“இந்நாட்டில் உருவாகும் 423ஆவது வீடமைப்புக் கிராமமான இந்த புதிய கிராமத்தில், 34 வீடுகளை அமைத்து, மிக விரைவில் மக்களுக்கு கையளிக்கவுள்ளோம்.
“நாட்டுக்காக தமது உயிரை, கண்களை, கால்களை மற்றும் இரதத்தைத் தியாகம் செய்த யுத்த வீரர்களின் மூவாயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களுக்கு, “தமக்குரியது” எனக் கூறிக் கொள்ளக்கூடிய வீடுகள் இல்லை.
“கடந்த அரசாங்கம், யுத்த வீரர்களின் குடும்ப நலன்களை உறுதிப்படுத்துவதாகப் பெரிதாகக் கூறிக் கொண்டது.
“எனினும், தற்போதைய பாதுகாப்பு அமைச்சுப் பதவியை வகிக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் நிறைவடையும் முன், அவ்வாறான அனைத்து யுத்த வீரர்களின் குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுக்கும் பாரிய வேலைத்திட்டத்தை, இந்த வாரம் நாம் ஆரம்பிக்கவுள்ளோம். உண்மையான நாட்டுப் பற்று இதுவாகும்” என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
2 hours ago
2 hours ago