ரஸீன் ரஸ்மின் / 2019 பெப்ரவரி 01 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி, இளைஞர்களை ஏமாற்றி, போலி திருமணம் செய்து, பண மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தங்கொட்டுவ, மாவத்தகம பகுதியைச் சேர்ந்த சுமார் 35 வயதுடைய பெண் ஒருவரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான இப்பெண், மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுநேரிய பிரதேசத்தில் வைத்து நேற்று (31) கைது செய்யப்பட்டார் என மாரவில பொலிஸார் தெரிவித்தனர்.
தொழில் நிமித்தம் இத்தாலி, கனடா ஆகிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகக் ௯றி சந்தேக நபரான குறித்த பெண், சுமார் எட்டு இளைஞர்களையும், திருமணம் முடித்தவர்களிடமும் ஏமாற்றி பல இலட்சங்கள் பணம் பெற்றுக்கொண்டதுடன், போலித் திருமணமும் செய்துகொண்டுள்ளார் எனவும் தமக்குத் தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இப்பெண்ணின் ஆசை வார்த்தைகளை நம்பி, கம்பளை, காலி, மாத்தறை, மஹவெவ, வென்னப்புவ, மாரவில, பிங்கிரிய பகுதியை சேர்ந்த பல இளைஞர்கள் பணம் கொடுத்து ஏமாந்துள்ளதுடன், போலி திருமணம் செய்தும் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் கணவர் தொடர்பில் தகவல் ஏதும் கிடைக்கவில்லை எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மாரவில பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
7 minute ago
36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
36 minute ago
1 hours ago