Editorial / 2017 ஜூன் 28 , பி.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹபரண – பொலன்னறுவ வீதியின் அம்பகஸ்வெவ பிரதேசத்தில், இன்று காலை 7.45க்கு இடம்பெற்ற வாகன விபத்தில், இருவர் உயிரிழந்துள்ளனர் என்று, பொலிஸார் தெரிவித்தனர்.
பொலன்னறுவயில் இருந்து தம்புளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிளும் தம்புளையில் இருந்து ஹபரண நோக்கிப் பயணித்த வானும் நேருக்கு நேர் மோதியமையால் இவ்விபத்து சம்பவித்துள்ளது.
தொம்பே பிரதேசத்தைச் சேர்ந்த 34 மற்றும் 46 வயதுடைய இருவரே, இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என, பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த வான் சாரதி, ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரண பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
18 minute ago
39 minute ago
6 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
39 minute ago
6 hours ago
10 Mar 2026