2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

யாத்திரைக்கு சென்ற நபர் யானை தாக்கி பலி

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 06 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-துஷார தென்னகோன்

பொலன்னறுவை, திபுலாகமை மல்தெனிய எனும் பிரதேசத்தில், செவ்வாய்க்கிழமை (06) யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரலகன்வில பொலிஸார் தெரிவித்தனர்.

அதே பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.  

குறித்த நபர், யாத்திரை ஒன்றுக்கு செல்லும் போதே யானை தாக்கியதாகவும் உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

யானை தாக்கி உயிரிழப்பவர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அரலகன்வில பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X