Editorial / 2017 ஒக்டோபர் 18 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர், ரஸீன் ரஸ்மின்
சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கந்தளுவை பகுதியில் ரயிலில் மோதி ஒருவர் உயிரிழந்துள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
பள்ளம வீதி, பங்கதெனிய பகுதியைச் சேர்ந்த சுமித் குமார ( வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த பயணிகள் ரயில், நேற்று (17) இரவு 8.30 மணியளவில் குறித்த பகுதியில் சென்றுகொண்டிருந்து.
இதன்போது, ஒருவர், ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார் என சிலாபம் பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார், சடலத்தை மீட்டதுடன், விசாரணைகளையும் ஆரம்பித்தனர்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த நபரின் சடலம், சிலாபம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டு, பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025