Princiya Dixci / 2016 ஜனவரி 10 , பி.ப. 02:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம். சனூன்
புத்தளம் மாவட்டத்தில் வதியும் 200 விசேட தேவையுடையவர்களுக்கு இலவசமாக சக்கர நாற்காலிகளை வழங்கி வைக்கும் நிகழ்வும் இலவச வைத்திய சிகிச்சையும், புத்தளம் மாவட்ட செயலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை நடைபெற்றது.
செரிபரல் பால்சி லங்கா பவுண்டேஷனினால் நடத்தப்பட்ட இந்நிகழ்வுகளை புத்தளம் மாவட்ட செயலகமும் சயில்ட் விஷன் நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
சிறியோர் முதல் பெரியோர் வரை 200 விசேட தேவையுடையவர்களுக்கு இதன்போது சக்கர நாற்காலிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட மேலதிக செயலாளர் வன்னிநாயக, செரிபரல் பால்சி லங்கா பவுண்டேஷன் பணிப்பாளர் திலானி கோபி, சயில்ட் விஷன் நிறுவன பணிப்பாளர் ஏ.சி.எம். ருமைஸ் உள்ளிட்ட மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
55 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago