2025 மே 06, செவ்வாய்க்கிழமை

விபத்துக்களில் இருவர் பலி

Princiya Dixci   / 2016 ஜனவரி 20 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், முல்லேரியா ஆகிய பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (19) நிகழ்ந்த விபத்துச் சம்பவங்களின் போது இருவர் உயிரிழந்துள்ளனர்.

குருநாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் கீழ் தெனகமுவப் பகுதியில் வைத்து, மதியம் 1.40க்கு, தம்புள்ளை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் எதிர்த்திசையில் வந்த டிப்பர் வண்டியுடன் மோதியதில், 43 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். 

சடலம், குருநாகல் வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், 42 வயதான டிப்பர் வண்டியின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லேரியா, களனிமுல்ல பிரதான வீதியில், களனி பாலத்துக்கு அருகாமையில் வைத்து, களனி நோக்கிச் சென்றுகொண்டிருந்த முச்சக்கரவண்டி எதிர்த்திசையில் வந்த வானுடன் மோதியதில், 53 வயதான முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளார். 

சடலம், ஐ.டீ.சீ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், வானின் சாரதியைப் பொலிஸார் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X