Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
புத்தளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிரம்பியடி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் இருவர் மரணமடைந்துள்ளதுடன், 34 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த வென்னப்புவ இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், முன்னால் சென்றுகொண்டிருந்த கனரக லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானது.
பஸ்ஸின் வேகத்தைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
பஸ்ஸின் சாரதி உட்பட பயணி ஒருவரும் மரணமடைந்துள்ள அதேவேளை, பெண்கள் இருவர் உட்பட காயமடைந்த 34 பயணிகளும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Feb 2026
01 Feb 2026
01 Feb 2026