2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

விபத்தில் இளைஞர் பலி

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 19 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்

மாதம்பை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் - கொழும்பு பிரதான வீதியின் இரட்டிக்குளம் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை (18) இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில், இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மாதம்பைப் பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி இடம்பெற்ற இந்த விபத்தில் காக்கப்பள்ளி இஹலதம்பகல்ல பிரதேசத்தைச் சேர்ந்த நாமல் சிந்தக்க (வயது 29) எனும் இளைஞரே உயிரிழந்துள்ளார்.

விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர், உடனடியாக சிலாபம் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்ட பின்னர் அங்கு உயிரிழந்துள்ளார்.

லொறியின் சாரதியைக் கைதுசெய்துள்ள மாதம்பைப் பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .