Thipaan / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 06:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
முஹம்மது முஸப்பிர்
புத்தளம்- சிலாபம் வீதியின் வட்டக்கள்ளி பிரதேசத்தில், முச்சக்கரவண்டியும் பாரவூர்தி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று சனிக்கிழமை இரவு 11 மணயளவில் இடம்பெற்ற இவ்விபத்தில் இரு பிள்ளைகளின் தந்தையான சிலாபம் மைக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதான குடும்பஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த பாரவூர்தியும் சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டியுமே மோதுண்டுள்ளன.
இதில் படுகாயங்களுக்குள்ளான முச்சக்கர வண்டிச் சாரதி சிலாபம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி சிலாபம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பிரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago