Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Kogilavani / 2015 செப்டெம்பர் 11 , பி.ப. 12:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹிரான் பிரியங்கர ஜயசிங்க
ஆனமடுவ பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற, மோட்டார் சைக்கில் விபத்தில் கிராமசேவகர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது மனைவி கடுங்காயக்களுக்கு உள்ளான நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
புத்தளம் கொடவெஹெர, தம்பரோபுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஜே.எச்.எம்.ஜானக பண்டார ஜய பத்ம என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார். இவரது மனைவியான தீபானி திசாநாயக்க கடுங்காயக்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்தில் உயிரிழந்தவர், பளுகொல்ல பிரதேசத்தில் கிராமசேவகராக கடமையாற்றி வருவதாகவும் மேற்படி இருவரும் அண்மையிலே திருமணம் செய்துகொண்டதாகவும் தெரியவருகிறது.
தலைநகரில் தொழில்புரிந்துவரும் தனது மனைவியான தீபானியை பஸ் ஏற்றிவிடுவதற்காக பஸ் நிலையத்துக்கு அழைத்து வரும் வழியிலே இவ் அனர்த்தத்துக்கு உள்ளகியுள்ளதாக தெரியவருகிறது.
இவ்விருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், வேகக்கட்டுப்பாட்டை மீறிச் சென்று மணிக்கூட்டுக்கோபுரத்துக்கு அருகிலிருந்து சிலையில் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
27 minute ago