Princiya Dixci / 2015 டிசெம்பர் 04 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மது முஸப்பிர்
கல்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டல்குடா சந்தியில் இன்று வியாழக்கிழமை (04) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கல்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கண்டல்குடா பாடசாலை சந்தியில் தனியார் பஸ் மற்றும் முச்சக்கரவண்டி மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கரவண்டியில் பயணித்த கல்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 53 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பிலிருந்து கல்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ், மற்றொரு பஸ்ஸூக்கு வழிவிட முற்பட்ட போது எதிரே வந்துள்ள முச்சக்கரவண்டியுடன் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விபத்தில் காயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கல்பிட்டி வைத்தியசாலையிலிருந்து புத்தளம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பஸ்ஸின் சாரதியைக் கைது செய்துள்ள கல்பிட்டி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago