Princiya Dixci / 2015 ஒக்டோபர் 13 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-முஹம்மது முஸப்பிர்
ஆனமடுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் 86 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஆனமடுவ பொலிஸார் தெரிவித்தனர். திங்கட்கிழமை (12) மாலை இடம்பெற்றுள்ள இவ்விபத்தில் ஆனமடுவ பிரதேசத்தில் வசிக்கும் முதிவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆனமடுவ நவகத்தேகம வீதியில் பெரியகுளம் பிரதேசத்தில் வீதிக்கு குறுக்காக வீதியைக் கடக்க முற்பட்டுள்ள முதியவர் மீது நவகத்தேகம பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் பலத்த காயங்களுக்கு உள்ளான முதியவர் அங்கிருந்து ஆனமடுவ வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் அங்கு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக ஆனமடுவ வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இவ்விபத்து தொடர்பில் ஆனமடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
24 minute ago
26 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
26 minute ago
1 hours ago