Editorial / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
அநுராதபுரத்திலுள்ள தொழிற்கல்வி பல்கலைக்கழக மாணவர்கள், நேற்று (29) சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
22 மாணவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்குமாறு கோரியே, இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம், பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக நிருவாகம் மேற்குறித்த 22 மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்ததன் பின்னர், அவர்களுக்கு வகுப்புத் தடை விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த, பல்கலைக்கழக மாணவர் சங்கச் செயலாளர் நிமந்த, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சிலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனினும், எவ்வித குற்றச்சாட்டுகளும் நிருபிக்கப்படாத நிலையில் குறித்த 22 பேருக்கு வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
அத்துடன், இவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வகுப்புத் தடையை நீக்க நடவடிக்கை எடுக்காவிடின் தாம் உண்ணாவிரதப் போராட்டத்தில் குதிக்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தார்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago