Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 ஜூன் 27 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
காரில் பயணித்த நபரொருவரைக் கடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (25) அதிகாலை 5 மணியளவில், இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் வென்னப்புவ - ஹெலன் மாவத்தையைச் சேர்ந்த நிஹால் அஜித் பீரிஸ் என்ற வர்த்தகரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளாரெனவும், வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
காரில் சென்ற தனது கணவரைக் கடத்தியவர்கள், காரை அங்கேயே விட்டுச் சென்றுள்ளனர் என, கடத்தப்பட்ட வர்த்தகரின் மனைவியான ஜெசிந்தா குமுதினி பெரேரா, மறுநாள் திங்கட்கிழமையன்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
அத்துடன், தனது கணவரின் அலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டபோது தான்னைக் கடத்தி வைத்துள்ளனர் எனவும் 50 இலட்சம் ரூபாய் கோருவதாகவும், மட்டக்களப்பில் உள்ள ஓர் இடத்திலேயே, தான் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக கணவர் கூறியதாகவும், அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
பணம் தொடர்பான கருத்து முரண்பாட்டின் காரணமாகவே, இக்கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார், இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago