Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 11 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம்- சிலாபம் பிரதான வீதியின் தெதுருஓயா பாலத்துக்கு அண்மித்த பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
சிலாபம், பங்கதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த சமரதூங்க ஹேரத்கே சாமல் பிரசன்ன (வயது 34) என்பவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
புத்தளத்திலிருந்து சிலாபம் நோக்கிப் பயணித்த லொறியொன்றும் மோட்டார் சைக்கிளும் மோதியதில் இவ்விபத்துச் சம்பவித்துள்ளது.
மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற குறித்த குடும்பஸ்தர், படுகாயமடைந்த நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம், பிரேத பரிசோதனை மற்றும் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்துடன் தொடர்புடைய லொறியின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், விபத்து தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
1 hours ago