ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 13 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலாபம் - குருநாகல் பிரதான வீதியின் முன்னேஸ்வரம் தேவஸ்தான வளாகத்துக்கு முன்னால் நேற்றிரவு (12) இடம்பெற்ற வாகன விபத்தில், முன்னேஸ்வரம் தேவஸ்தான உதவிக் குருக்கள் உயிரிழந்துள்ளாரென, சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் வீதி, முன்னேஸ்வரம் எனும் முகவரியை சேர்ந்த சிவஸ்ரீ வை.சுப்ரமணியம் ( வயது 66) குருக்களே, இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.
சம்பவ தினத்தன்று, இரவுப் பூஜைகளை முடித்துக்கொண்ட குருக்கள், வீட்டுக்குச் செல்வதற்காக ஆலயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரிக் கடவையைக் கடக்க முற்பட்ட போது, சிலாபம் - குருநாகல் பிரதான வீதியில் வேகமாகப் பயணித்த காரொன்று, குருக்களை மோதிவிட்டு நிறுத்தாமல் சென்றுள்ளது.
குறித்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட குருக்கள் உடனடியாக சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், விபத்தையடுத்து, நிறுத்தாமல் சென்றதாகக் ௯றப்படும் கார், சிலாபம் பிரதேசத்தை விட்டு வெளியே தப்பிச் சென்ற நிலையில் காரைச் செலுத்தி சென்ற சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன், குறித்த காரும் கைப்பற்றப்பட்டுதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பில், சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
5 hours ago
9 hours ago
10 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago
10 Mar 2026