2025 மே 05, திங்கட்கிழமை

விபத்தில் மூவர் காயம்

முஹம்மது முஸப்பிர்   / 2017 ஜூன் 22 , பி.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு - சிலாபம் வீதியின் வென்னப்புவ டிப்போ சந்திக்கருகில், முச்சக்கரவண்டிகள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், பலத்த காயமடைந்த மூவர், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரென, வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.

 

புத்தளத்திலிருந்து நீர்கொழும்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியிலிருந்த இருவரும், வென்னப்புவ நோக்கிச் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டியின் சாரதியுமே இவ்வாறு காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இவ்விபத்தில் இரு முச்சக்கரவண்டிகளும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன.

புத்தளத்திலிருந்து பயணித்த முச்சக்கரவண்டியின் சாரதிக்கு ஏற்பட்ட உறக்கமே இந்த விபத்துக்கு காரணமாக அமைந்தது என்று  விசாரணையில் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த வென்னப்புவ பொலிஸார், இந்த விபத்துத்  தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X