2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் மூவர் படுகாயம்

ரஸீன் ரஸ்மின்   / 2017 ஜூன் 23 , பி.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில், மூவர் படுகாயமடைந்து புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மதுரங்குளியில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணித்த கெப் வாகனம், எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதி, வீதியோரத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த டிப்பர் வாகனத்துடனும்  மோதியதில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும், பகல் உணவுக்காக ஹோட்டல் ஒன்றுக்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனம் ஒன்றின் சாரதியும் காயமடைந்த நிலையில் புத்தளம் தள  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X