எம்.யூ.எம். சனூன் / 2017 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புத்தளம் பிராந்தியத்துக்கான வியாபார ஊக்குவிப்பு அதிகாரியாக, புத்தளம் நகரைச் சேர்ந்த இப்ளால் அமீன், நேற்று (01) முதல் நியமனம் பெற்றுள்ளார்.
கைத்தொழில், வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தரவுக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் வழிகாட்டலோடு, தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக, இப்ளால் அமீன் தெரிவித்தார்.
அத்துடன், தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பணியை, நடுநிலையாகச் செய்து முடிக்க உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
புத்தளம் பிதேச செயலகம் உள்ளடங்களாக ஏனைய பிரதேசங்களின் வியாபார தொழில் முயற்சிகளை முன்னேற்றுவது, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை நாடி உதவிகளைப் பெற்றுகொடுப்பது போன்றன, இவரது பதவியின் பிரதான நோக்கங்களாகும்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025