2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

வீடு திரும்பிய கான்ஸ்டபிள் விபத்தில் பலி

Editorial   / 2018 ஒக்டோபர் 10 , பி.ப. 02:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம்-புத்தளம் வீதியில் தேவாலயத்துகருகில், வாகனமொன்றுடன் ​மோதுண்டு, பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று (10), அதிகாலை இடம்பெற்றுள்ளது. விபத்தில், நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த, 32 வயதுடைய பல்லியகுருகே ஹர்ஷ புத்திக என்பவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த கான்ஸ்டபிள், ஓமந்தை பொலிஸ் நிலையத்துக்கு இணைவாக  சேவையாற்றி வந்தார். இந்நிலையில் இவர் சேவையை நிறைவு செய்து, விடுமுறைப் பெற்று தனது வீட்டுக்கு செல்வதற்காக பஸ்ஸில் வந்திறங்கிய போதே,  இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

அநுராதபுரம் பகுதியிலிருந்து பயணித்த வாகனமொன்றுடன் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்  இவர் உயிரிழந்துள்ளாரென, ஓமந்தை பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X