Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
முஹம்மது முஸப்பிர் / 2017 ஜூலை 19 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், ஆராச்சிக்கட்டுவ பிரதேச வீடொன்றுக்குள், முகமூடியணிந்து நுழைந்த கொள்ளையர்கள் சிலர், அங்கிருந்தவர்களை அச்சுறுத்தி, 17,000 ரூபாய் பணம், 27,000 ரூபாய் பெறுமதியான தங்கப் பெண்டன்கள் 2 மற்றும் கெமரா ஆகியவற்றைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர் என, ஆராச்சிக்கட்டுவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தர்மசிரி விஜேசிங்க தெரிவித்தார்.
குறித்த கொள்ளையர்கள், திங்கட்கிழமை (17) இரவு, குறித்த வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டினுள் நுழைந்த போது, வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டுள்ளனர். இதன்போது, வீட்டில் உள்ளவர்களுக்கு ஆயுதங்களைக் காட்சி அவர்களை அச்சுறுத்திவிட்டே, வீட்டிலிருந்த பணம், நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யக்கூடாது என்று கொலை அச்சுறுத்தல் விடுத்துவிட்டே, அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனரெனவும், பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பல சம்பவங்கள் இதற்கு முன்னரும் இப்பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் அனைத்துக் குற்றச்செயல்களையும் குறைத்து, பிரதேசத்தின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதற்காக, பொலிஸ் நிலையத்தின் ஊடாக முழு பலத்தையும் பயன்படுத்தவுள்ளதாக, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் புதிதாகத் திறந்துவைக்கப்பட்ட புதிய பொலிஸ் நிலையத்துக்கு முதலாவதாகக் கிடைத்த முறைப்பாடு இதுவென்பது குறிப்பிடத்தக்கது
57 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago