Editorial / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 12:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம்- தில்லையடி ரத்மல்யாய கிராம சேவையாளர் பிரிவில், தெரிவுசெய்யப்பட்ட வீட்டுத் தோட்ட உரிமையாளர்களுக்கு, இலவசமாக தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளன.
புத்தளம் வை.எம்.எம். கிளை நிறுவனத்தின் ஏற்பாட்டில், ரத்மல்யாய ஆதிப் பவுண்டேஸனின் பூரண அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வானது ரத்மல்யாய மக்கள் பணிமனையில் 4 ஆம் திகதி நடைபெற்றது.
புத்தளம் தெங்கு அபிவிருத்தி அதிகாரியும், வை.எம்.எம். கிளை நிறுவனத்தின் தலைவருமான எம்.என்.எம்.ஹிஜாஸ், பிரதேச கிராம சேவையாளர் ஏ.பார்த்திபன், வை.எம்.எம். கிளை நிறுவனத்தின் உறுப்பினர் எம்.ஐ.எம். ஜவ்சித் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டு தென்னங்கன்றுகளை வழங்கி வைத்தனர்.
இதன்போது 100 தென்னங்கன்றுகள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

22 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
51 minute ago
1 hours ago