ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூலை 15 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}

கற்பிட்டி பிரதேச சபைக்குட்பட்ட சின்னக்குடியிருப்பு மற்றும் மண்டலக்குடா ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள 2 வீதிகளை காபட் வீதியாக புனரமைப்பதற்கு 10 மில்லியன் 30 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதுடன், புனரமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த 2 வீதிகளையும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் யு.எம். அக்மல், ஐ.தே.கவின் புத்தளம் தொகுதி பிரதான அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதற்கமைய, பெருந்தெருக்கல் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல, ஐ.தே.கவின் புத்தளம் தொகுதிப் பிரதான அமைப்பாளர் எம்.என்.எம். நஸ்மிக்கு, வீதி அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து குறித்த இரண்டு வீதிகளையும் காபட் வீதியாக புனரமைக்க 10 மில்லியன் 30 இலட்சம் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கற்பிட்டி, சின்னக்குடியிருப்பு கிராம அலுவலர் பிரிவில் உள்ள ஜெட்டி வீதி மற்றும் மண்டலக்குடா கிராம அலுவலர் பிரிவில் உள்ள முபீன் பள்ளிக்குச் செல்லும் வீதி என்பன காபட் வீதியாக புனரமைக்கப்படவுள்ளதுடன், அதற்கான பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த இரண்டு வீதிகளையும் காபட் வீதிகளாக புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், கற்பிட்டி பிரதேசத்தில் உள்ள ஏனைய வீதிகளும் கட்டம் கட்டமாக புனரமைக்கப்படவுள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் கற்பிட்டி அமைப்பாளர் யு.எம். அக்மல் தெரிவித்தார்.
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago