முஹம்மது முஸப்பிர் / 2017 ஒக்டோபர் 17 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
முந்தல் பொலிஸ் பிரிவினுள் பொலிஸார் மேற்கொண்ட வீதிச் சோதனை நடவடிக்கையின் போது, போக்குவரத்து விதிகளை மீறிய 81 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நடவடிக்கையின் போது வீதி ஒழுங்குகளை மீறியமை, மதுபோதையில் வாகனம் செலுத்தியமை, அதிக வேகத்தில் பயணித்தமை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனம் செலுத்தியமை, பதிவு செய்யப்படாத வாகனங்களை ஓட்டிச் சென்றமை, தலைக்கவசம் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்தமை, ஒளி விளக்குகளின்றி வாகனங்களைச் செலுத்தியமை போன்ற குற்றங்களுக்காகவே, இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவர்களுள் தமது சைக்கிளின் பின்புற சிவப்பு சமிக்ஞைப் பிரதிபலிப்பு இன்றியும், முன்புற ஒளி விளக்கு மற்றும் பிரேக் இல்லாமை போன்ற காரணங்களால் 26 பேருக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான குறைபாடுகளுடனான சைக்கிள்களில் செல்வோரின் கவனக் குறைவால் வாகனச் சாரதிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு உள்ளாவதோடு, அதிக விபத்துகளும் இடம்பெறுவதாகவும், இதன் காரணமாக இவ்வாறான குறைபாடுகளுடனான சைக்கிள்களுக்கு எதிராக சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதாகவும் முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமன் ஏக்கநாயக்கா தெரிவித்தார்.
இந்த விசேட நடவடிக்கையில் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சமன் ஏக்கநாயக்கா தலைமையிலான முந்தல் பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவினைச் சேர்ந்த சுமார் 15 பொலிஸார் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025