ரஸீன் ரஸ்மின் / 2017 ஒக்டோபர் 07 , பி.ப. 12:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் - சிலாபம் பிரதான வீதியில் நேற்றுப் பயணித்த காரொன்று, வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக, முந்தல் பொலிஸார் தெரிவித்தார்.
குறித்த கார், வேகக் கட்டுப்பாட்டை இழந்தமையால், வீதியை விட்டு விலகி வீதியோரத்தில் இருந்த தொலைபேசிக் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
காரில் இருவர் பயணித்துள்ள போதிலும், இருவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் காரின் முன் பகுதி சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
7 hours ago