ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூன் 27 , பி.ப. 03:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

புத்தளம், அல்காசிமிசிட்டி இங்கிவரும் முல்லை ஸ்கீம் இளைஞர் அபிவிருத்தி அமைப்பினால், புனித ரமழான் மாதத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இஸ்லாமியப் போட்டி நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கும் நிகழ்வு, திங்கட்கிழமை இடம்பெற்றது.
புத்தளம், அல்காசிமி சிட்டி, முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையின் பின்னர் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், வடமாகாண சபை உறுப்பினர் யாசின் ஜவாஹிர் மற்றும் முல்லை ஸ்கீம் நூரானிய்யா ஜூம்ஆ பள்ளிவாசல் தலைவர் மௌலவி யூ.எம்.அப்துல் வதூத் உள்ளிட்ட உலமாக்கள், முல்லை ஸ்கீம் இளைஞர் அபிவிருத்தி அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
இதன்போது, குறித்த அமைப்பினரால் நோன்பு மாதம் முதல் வாரத்தில் விநியோகிக்கப்பட்ட 30 இஸ்லாமிய கேள்விகளுக்கு சரியான விடைகளை எழுதி வெற்றிபெற்ற நான்கு மாணவர்களுக்கு, பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்பட்டன.
மாணவர்கள் மத்தியில் இஸ்லாமிய பொது அறிவை வளர்க்கும் நோக்கில், குறித்த அமைப்பினரால் ஒவ்வொரு வருடமும் ரழமான் மாதத்தில் இவ்வாறு இஸ்லாமிய பொது அறிவுக் கேள்வி - பதில் போட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


18 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
47 minute ago
1 hours ago
1 hours ago