Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
ரஸீன் ரஸ்மின் / 2017 ஜூன் 18 , பி.ப. 03:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் மாவட்டத்திலுள்ள வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்களைத் தரமுயர்த்தி, குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை, சுகாதாரப் பிரதியமைசச்ர் பைசல் காசிம் முன்னெடுத்துள்ளாரென, வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ், இன்று (18) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
“புத்தளம் தள வைத்தியசாலை மற்றும் கற்பிட்டி மாவட்ட வைத்தியசாலை ஆகிய இரு பிரதான வைத்தியசாலைகளுடன், கரைத்தீவு, கொத்தாந்தீவு, சமீரகம, புழுதிவயல் உள்ளிட்ட கிராமங்களிலுள்ள கிராம வைத்தியசாலைகள், மத்திய மருந்தகங்கள் என்பனவற்றை, சகல வசதிகளிலும் அபிவிருத்தி செய்து, அவற்றைத் தரமுயர்த்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளன.
“புத்தளம் மாவட்டத்திலுள்ள சுகாதாரத் துறைகளில் காணப்படும் குறைபாடுகளை இனங்கண்டு, அவசரமாக நிறைவேற்றிக் கொடுக்குமாறு நான் விடுத்த கோரிக்கைக்கு அமைய, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமின் ஆலோசனையின் பேரில் சுகாதாரப் பிரதியமைச்சர் பைசல் காசிமின் முயற்சியால், குறித்த வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் என்பன தரமுயர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
“அத்துடன், குறித்த வைத்தியசாலைகள் மற்றும் மத்திய மருந்தகங்களின் தரமுயர்த்தலுக்கு ஏற்ப, அங்கு காணப்படும் மனிதவள மற்றும் பௌதீக வளங்களில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், சுகாதாரப் பிரதியமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
“கடந்த வாரம் புத்தளத்துக்குக்கு வருகை தந்த பிரதியமைச்சர், புத்தளம் மற்றும் கற்பிட்டி வைத்தியசாலைகளுக்கு நேரில் விஜயம் செய்து, அபிவிருத்தி மற்றும் தரமுயர்த்துதல் சம்பந்தமாகக் கலந்துரையாடினார்.
“சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் உதவியுடன், புத்தளம் மாவட்டத்தில் சுகாதாரத் துறையில் காணப்படும் குறைபாடுகளை அவசரமாக நிவர்த்தி செய்வதற்கும் வைத்தியர் மற்றும் தாதியர் நியமனங்களின் போது, புத்தளம் மாவட்டத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் நியமனங்களும் வளங்களும் ஒதுக்கித் தரப்படும் எனவும் சுகாதாரப் பிரதியமைச்சர் வாக்குறுதியளித்தார்” என்றார்.
8 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
9 hours ago