2025 செப்டெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

ஐரோப்பிய ஆசிய தொழில் கூட்டுறவு மாநாடு சீனாவில் 13இல் ஆரம்பம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பொ.சோபிகா

ஐரோப்பிய, ஆசிய தொழில் கூட்டுறவு மாநாடு, எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதி சீனாவில் ஆரம்பமாகவுள்ளதாக பிரதி தொழில் ஆணையாளர் க.கனகேஸ்வரன் இன்று செவ்வாய்கிழமை (11) தெரிவித்தார்.

இந்த மாநாட்டுக்கு இலங்கை தொழில் திணைக்களத்தில் இருந்து 6 பேர் கொண்ட குழு, சீனாவுக்கு நாளை புதன்கிழமை (12) பயணமாகவுள்ளது.

இந்த தொழில் கூட்டுறவு மாநாடு, நவம்பர் 13ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 3ஆம் திகதி  வரை நடைபெறவுள்ளது.

ஐரோப்பிய ஆசிய நாடுகளில் இருந்து தொழில்துறை சார் பிரதிநிதிகள் பலர், இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இதில், தொழில் திணைக்கள திட்டங்கள் தொடர்பான கருத்துக்கள் பகிர்ந்துகொள்ளப்படவுள்ளன.

அந்த மாநாட்டின் போது பகிர்ந்துகொள்ளப்படும் விடயங்களை இலங்கையிலுள்ள தொழிற்துறைகளில் நடைமுறைப்படுத்துவதற்கு உதவியாக இருக்கும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X