2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்கு 20 விண்ணப்பங்கள்

Menaka Mookandi   / 2013 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வெற்றிடமாகவுள்ள பிரதம நிறைவேற்று அதிகாரி பதவிக்காக விண்ணப்பிப்பதற்கான இறுதி திகதி கடந்த 15ஆம் திகதியுடன் நிறைவடைந்ததை தொடர்ந்து, தமக்கு மொத்தமாக 20 விண்ணப்பங்கள் இந்த பதவிக்காக கிடைத்துள்ளதாக கொழும்பு பங்குப்பரிவர்த்தனையின் மனித வளங்கள் பிரிவு அறிவித்துள்ளது.

இந்த பதவியில் தற்போது உள்ள சுரேகா செல்லஹேவா, தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இந்த பதவியில் புதிய ஒருவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .