2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஜனசக்தி நிறுவனத்தின் வருடாந்த திறன்காண் போட்டி 'பிரதீபா 2013'

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 24 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜனசக்தி காப்புறுதி நிறுவனத்தின் வருடாந்த திறன் காண் போட்டி 'பிரதீபா 2013' (ஜனசக்தி விளையாட்டு மற்றும் நலன்புரி கழகத்தின் மூலம் ஒழுங்கமைக்கப்பட்டது) அண்மையில் மஹிந்த ராஜபக்ஷ தாமரை தடாகத்தில் நடைபெற்றது. ஜனசக்தி நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் பிரகாஷ் ஷாஃப்ட்டர் இந் நிகழ்வின் பிரதம அதிதியாகவும், கௌரவ விருந்தினராக சந்திரா ஷாஃப்ட்டர் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
 
இந் நிகழ்வை ஜனசக்தியின் நாட்காட்டியில் வர்ணமயமான நிகழ்வாக பதியும் நோக்கில் ஜனசக்தியின் பல்வேறு கிளைகளைச் சேர்ந்த 106 திறமையாளர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர். இந் நிகழ்வின் கலை நிகழ்ச்சிகளுக்கு பழம்பெரும் இசையமைப்பாளர் ஜயந்த ரத்னாயக்க ஆதரவு வழங்கியிருந்ததுடன், ஜனசக்தி ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பங்கேற்றிருந்தனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .