2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பிணைகளை 6.0 வீதத்துக்கு விற்பனை

A.P.Mathan   / 2014 ஜனவரி 07 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐந்து வருட சவரின் பிணைகளை 6 வீதத்துக்கு விற்பனை செய்திருந்ததன் மூலமாக இலங்கை, 1 பில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டியுள்ளது.
 
இந்த பிணைகளை கொள்வனவு செய்வதற்காக சுமார் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடுகளை தோற்றுவித்திருந்ததாகவும், நேற்றைய தினத்தின் ஆரம்பத்தில் இந்த கொடுக்கல் - வாங்கல் பூர்த்தி செய்யப்படடிருந்ததாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களின் மூலமாக அறிய முடிந்தது. 
 
இந்த விற்பனை சிடி, எச்எஸ்பிசி, ஸ்டான்டர்ட் சார்ட்டட் மற்றும் யுபிஎஸ் ஆகிய வங்கிகளின் மூலம் மேற்பார்வை செய்யப்பட்டிருந்தன. 
 
இந்த பிணை விற்பனையின் மூலமாக அரசாங்கத்தின் கடன் தேவை நிவர்த்தி செய்யப்படவுள்ளதுடன், வட்டி வீதங்களை சீராக பேண உதவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .