2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

கொழும்பு பங்குச்சந்தையில் மொத்த வெளிநாட்டு உட்பாய்ச்சல் 18 பில்லியன் ரூபாவை எட்டியது

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 05:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு பங்குச்சந்தையில் மொத்த வெளிநாட்டு உட்பாய்ச்சல் 18 பில்லியன் ரூபா பெறுமதியை திங்கட்கிழமை பதிவு செய்தது. வங்கித்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகளில் அதிகளவு முதலீடு மற்றும் இதர முன்னணி நிறுவனங்களில் முதலீடுகளை மேற்கொண்டிருந்தமை போன்றன இந்த பெறுமதி அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருந்தன.
 
இதில் குறிப்பிடத்தக்க பங்கு கைமாறலாக 850 மில்லியன் ரூபா பெறுமதியான ஏழு மில்லியன் ஹற்றன் நஷனல் வங்கியின் வாக்குரிமையற்ற பங்குகள் அடங்கியிருந்தது. சம்பத் வங்கி மற்றும் கொமர்ஷல் வங்கி பங்குகளையும் கொள்வனவு செய்வதில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தமது கவனத்தை செலுத்தியிருந்தனர். வங்கித்துறை சாராத நிறுவனப்பங்குகளை பொறுத்தமட்டில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், எயிட்கன் ஸ்பென்ஸ் மற்றும் சிலோன் டொபாக்கோ போன்ற நிறுவனங்களின் பங்குகள் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவு ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .