2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி 11 வீதத்தால் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 நவம்பர் 15 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

செப்டெம்பர் மாதத்தில் இலங்கையின் ஏற்றுமதி 11 வீதத்தால் அதிகரித்து 890 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. இதில் ஆடை ஏற்றுமதிகள் 27 வீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஆடை ஏற்றுமதியின் மூலம் 386 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது. இதில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பா சந்தைகளுக்கான ஏற்றுமதியில் அதிகரிப்பு ஏற்பட்டமை அதிகளவு பங்களிப்பை வழங்க ஏதுவாக அமைந்திருந்தது.
 
அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதி 30.7 வீதத்தாலும், ஐரோப்பாவுக்கான ஏற்றுமதி 27.7 வீதத்தாலும் அதிகரித்தது. இறப்பர் பொருட்கள் ஏற்றுமதி 28 வீதத்தால் அதிகரித்திருந்ததுடன், 644 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியிருந்தது. உணவு மற்றும் பான வகை ஏற்றுமதி 46 வீத அதிகரிப்பை பதிவு செய்து 18.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்திருந்தது.
 
எரிபொருள் இறக்குமதி 61 வீதத்தால் அதிகரித்து 516 மில்லியன் ரூபாவாக பதிவாகியிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .