2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இலங்கையில் வர்த்தக பங்காண்மையை நாடும் 23 சீன நிறுவனங்கள்

A.P.Mathan   / 2014 மார்ச் 05 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

சினாவைச் சேர்ந்த சுமார் 23 நிறுவனங்கள் இலங்கையில் இயங்கும் தனியார் துறையை சேர்ந்த நிறுவனங்களுடன் கைகோர்த்து செயலாற்றுவதற்கு தமது ஆர்வத்தை தெரிவித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சீனாவின் வர்த்தக தூதுவக் குழுவினர், உள்நாட்டு தனியார் துறையைச் சேர்ந்த வர்த்தக பிரமுகர்களை நேற்றைய தினம் சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.

சீனாவிலிருந்து வருகை தந்திருந்த அரச அதிகாரிகளில் 23 தனியார் நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் போன்றவர்கள் உள்ளடங்கியிருந்தனர்.

மின்குமிழ்கள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, இரசாயனப் பதார்த்தங்கள், வீட்டுப்பாவனைப் பொருட்கள் உற்பத்தி, வியாபாரம் மற்றும் சரக்கு கையாள்கை, இலத்திரனியல் சாதனங்கள், வெக்கியும் பொறியியல் நுட்பம், தொழில்நுட்பம் மற்றும் பிளாஸ்ரிக் போன்ற பொருட்கள் தொடர்பிலான துறைகளில் தமது வர்த்தக பங்காண்மை செயற்பாடுகளை இலங்கையில் முன்னெடுக்க இந்த நிறுவனங்கள் ஆர்வத்துடன் காணப்படுகின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .