2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

ஜூலை மாதத்தில் இலங்கையில் கார்கள், SUV பதிவுகள் அதிகரிப்பு

A.P.Mathan   / 2013 ஓகஸ்ட் 14 , மு.ப. 09:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் வாகனப்பதிவுகள் கடந்த 15 மாதங்களில் உயர்வான பெறுமதியை ஜூலை மாதத்தில் பதிவு செய்திருந்தன. கடந்த ஆண்டின் ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில் 74.6 வீத அதிகரிப்பை பதிவு செய்து, மொத்தமாக 2306 கார்கள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டிருந்தன. 
 
இதில் பெரும்பாலானவை ரீகண்டிஷன் செய்யப்பட்ட கார் வகைகளாகவும், ஸ்போர்ட்ஸ் ரக கார் வகைகளாகவும் அமைந்துள்ளதாக மோட்டார் வாகன பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது. கடந்த மாதத்தில் மொத்த வாகன பதிவுகளின் எண்ணிக்கை 27,797 ஆக காணப்பட்டது. இதில் 13,629 மோட்டார் சைக்கிள்களும், 7,369 முச்சக்கர வண்டிகளும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. சொகுசுகார் தயாரிப்புகளான பிஎம்டபிள்யு, மேர்சடீஸ் பென்ஸ் ரக கார்களின் பதிவிலும் அதிகரிப்பு காணப்பட்டது. 
 
சிறிய ரக கார்களை பொறுத்தமட்டில் மாருதி சுசுகி அல்டோ ரக கார்கள் அதிகளவில் பதிவாகியிருந்தன. SUV ரக வாகனங்களை பொறுத்தமட்டில் கியா, மிட்சுபிஷி மொன்டெரோ, லான்ட் ரோவர் மற்றும் ஹுன்டாய் போன்ற தயாரிப்புகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டிருந்தன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .