2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 159ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடல்

A.P.Mathan   / 2013 செப்டெம்பர் 13 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் பெருந்தோட்டங்களை நிர்வகிக்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் மேற்பார்வை அமைப்பாக திகழும் இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்தின் 159ஆவது வருடாந்த பொது ஒன்றுகூடல் இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் சம்மேளனத்தின் புதிய தலைவராக தற்போதைய பதில் தலைவரும் களனி வெலி பிளான்டேஷன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொஷான் ராஜதுரை பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
கடந்த மூன்று ஆண்டு காலமாக சம்மேளனத்தின் தலைவராக பலாங்கொட மற்றும் மடுல்சீம பிளான்டேஷன்களின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் ஒபயசேகர கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை மாற்றியமைக்கப்படும் பெருந்தோட்டத்தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் பெருந்தோட்ட கம்பனிகளின் சார்பாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .