2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கொழும்பு பங்குச்சந்தையினூடாக 119.4 பில்லியன் ரூபா மூலதனமாக திரட்டல்

A.P.Mathan   / 2014 ஜனவரி 02 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

2013ஆம் ஆண்டில் கொழும்பு பங்குச்சந்தையினூடாக மொத்தமாக 119.4 பில்லியன் ரூபா மூலதனமாக கம்பனிகள் திரட்டியுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டில் திரட்டப்பட்ட தொகையுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 300% அதிகரிப்பாகும். 
 
இதுவரையில் பதிவாகியுள்ள அதியுயர் மூலதன திரட்டல் பெறுமதி இதுவென்பது குறிப்பிடத்தக்கது. ஆசிய பிராந்தியத்தில் காணப்படும் சிறந்த பங்குச்சந்தைகளில் ஆறாமிடத்தை கொழும்பு பங்குச்சந்தை தனதாக்கியுள்ளது. 
 
கடந்த இரண்டு ஆண்டுகளில் கொழும்பு பங்குச்சந்தை பல்வேறு விதமான சவால்களை எதிர்நோக்கியிருந்த நிலையில் 2013ஆம் ஆண்டில் 68.3 பில்லியன் பெறுமதியான கடன்களை திரட்டிக் கொண்டமை மற்றும் 34.1 பில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக் கொண்டமை போன்றன சிறந்த சாதனைகளாக அமைந்துள்ளன என பெரும்பாலான ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .