2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

'புவி மணித்தியாலம் 2013' நிகழ்வை கொண்டாடும் எக்ஸ்போலங்கா

A.P.Mathan   / 2013 ஏப்ரல் 02 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}


புவியைப் பாதுகாப்பதற்காக மக்களை ஐக்கியப்படுத்தும் வகையில், எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் பி.எல்.சி. நிறுவனமானது இவ்வருடத்தின் 'புவி மணித்தியாலம்' (Earth Hour) நிகழ்வை கொண்டாடுவதற்கான வாக்குறுதி ஒன்றை வெளிப்படுத்தியுள்ளது. காலநிலை மாற்றம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் மாற்றமொன்றை உருவாக்குதல் ஆகியவற்றின் ஊடாக அதற்கெதிராக போராடும் விதத்திலமைந்த இந்த பூகோள ரீதியிலான தன்னார்வ சூழல் நலன்பேண் பிரசாரத்திட்டத்தை கைகோர்த்து கொண்டாடும் பொருட்டு, எக்ஸ்போலங்காவைச் சேர்ந்த (Expolankians) நூற்றுக் கணக்கானோரை ஒன்றுதிரட்டியதன் மூலம் இவ் வாக்குறுதியை நிறுவனம் வழங்கியுள்ளது.

உலகமெங்கும் ஏழு கண்டங்களிலுள்ள 135 நாடுகள் மற்றும் ஆட்புல எல்லைகளில் அமைந்திருக்கும் 7,000 நகரங்கள் மற்றும் பட்டிணங்களில் வாழ்கின்ற நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடன் ஒன்றிணைந்து இவ்வருட புவி மணித்தியாலத்தை அனுஷ்டிப்பதற்காக, 'பேஸ்புக்கை' அடிப்படையாகக் கொண்டியங்கும் 'I will if you Will' எனும் செயலியக்கத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்ததன் மூலம் எக்ஸ்போலங்கா நிறுவனமானது தன்னுடைய பிரசார நடவடிக்கையை ஆரம்பம் செய்துள்ளது. 'மணித்தியாலத்திற்கு அப்பால் செல்லவும்' (Go Beyond the Hour) அதேபோல் சுற்றாடலுக்காக ஏதாவது ஒரு காரியத்தை செய்வதற்கும் பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கும் வகையிலான ஒரு சவாலாக இப்பிரசார நடவடிக்கை அமைந்துள்ளது.

இதனை மேற்கொள்வது மிகவும் இலகுவான ஒரு விடயமாகும். அதாவது – ஒரு மரத்தை நடுதல், பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சிக்கு உட்படுத்துதல், பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதில் இருந்து விலகியிருத்தல் போன்ற பல செயற்பாடுகளின் மூலமாக அதனை மேற்கொள்ள முடியும். இந்த 'பேஸ்புக்' ஊக்குவிப்புத் திட்டத்தில் அபரிமிதமானோர் பங்குபற்றியுள்ளதுடன், இது தொடர்பில் வெளிப்படுத்திய ஈடுபாடும் உண்மையிலேயே வெற்றிகரமானதாக அமைந்துள்ளது. பங்குபற்றுனர்கள் தெரிவுசெய்யப்பட்டதுடன், புவி மணித்தியாலத்திற்கென வடிவமைக்கப்பட்ட ரி-சேர்ட் போன்ற பிரத்தியேகமான மேம்படுத்தல் உற்பத்திகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. அதேவேளை, இவற்றுள் அதிர்ஷ்டமிக்க நுழைவுகள் 10இ000 ரூபாவை பரிசாக தட்டிச் செல்வதற்கான வாய்ப்பொன்றும் இதில் காணப்பட்டது.

எக்ஸ்போலங்கா நிறுவனம் தனது முன்றலில்; வேறு எதுமாதிரியும் இல்லாத புதுமையான நிகழ்வொன்றை 2013 மார்ச் 23ஆம் திகதி சனிக்கிழமை அங்குரார்ப்பணம் செய்தது. அதாவது விசுவாசமிக்க மற்றும் உற்சாகமிக்க எக்ஸ்போலங்காவை சார்ந்த நபர்கள் இந்த புவி மணித்தியாலத்தை கொண்டாடுவதற்காகவும் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவதற்காகவும் அங்கு ஒன்றாக கைகோர்த்திருந்தனர். டேவிஸ் குகன்ஹைம் இயக்கிய 'ஒரு அசௌகரியமான உண்மை' (An Inconvenient Truth) எனும் விருதுபெற்ற ஆவணப்படம் திரையிடப்பட்டமை இந்நிகழ்வை அலங்கரித்தது. பூகோளம் வெப்பமடைதல் தொடர்பில் பிரஜைகளை அறிவூட்டுவதற்காக ஐக்கிய அமெரிக்க முன்னாள் உதவி ஜனாதிபதி அல் எயோர் மேற்கொண்ட பிரசார நடவடிக்கை பற்றியதான இந்த ஆவணப்படமானது, பரந்த விளக்கங்களைத் தரும் 'ஸ்லைட் ஷோக்களை' உள்ளடக்கியதாக டேவிஸின் சொந்த செலவில் தயாரிக்கப்பட்டதாகும். அசைவியக்கம் கொண்ட இக்காட்சிகளைத் தொடர்ந்து ஒரு வாக்குறுதி முன்மொழிவு இடம்பெற்றது. அதன்படி, எக்ஸ்போலங்கா நிறுவனத்தின் ஊழியர்கள் 60+ புவி மணித்தியால பதாகைகளில் தத்தமது கையொப்பங்களை இட்டதன் ஊடாக பூகோளம்; வெப்பமடைதலுக்கு எதிரான தமது ஆதரவை வெளிப்படுத்தியதைக் காணக் கூடியதாக இருந்தது.

இவ்வருட புவி மணித்தியாலத்தை கடைப்பிடிப்பதற்கான முன்னெடுப்புக்கள் குறித்து எக்ஸ்போலங்கா ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல், கூட்டாண்மைத் தொடர்பாடல் மற்றும் கூட்டாண்மை சமூகப் பொறுப்பு திட்ட பிரிவின் தலைமை அதிகாரியான பெடி வீரசேகர கூறுகையில், 'இந்த சர்வதேச அளவிலான முன்னெடுப்புக்கு ஆதரவு வழங்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நாம் முன்மொழிவு ஒன்றை விடுத்து வருகின்றோம். தாய் பூமியை பாதுகாப்பதற்கான எமது ஆதரவானது, ஒரு தொடர்ச்சியான வாக்குறுதியாக காணப்படும் அதேநேரம், ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு நிமிடமும் சாத்தியமான சகல வழிகளிலும் இப்பணியை ஆற்றுகின்றோம் என்பதை எக்ஸ்போலங்கா நிறுவனத்தைச் சேர்ந்தோரின் சார்பில் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். மிகப் பிரமாண்டமான இந்த உலகளாவிய செயற்றிட்டத்தில் பங்கெடுப்பதையிட்டு நாம் புளகாங்கிதம் அடைவதுடன், இந்த தகவலை பரப்பும் விடயத்திலும,; சாத்தியமான அளவுக்கு அதிகமான இலங்கையரை இம் முயற்சிக்காக ஒன்றுசேர்ப்பதிலும் நாம் எவ்வித சிரமத்தையும் உணரவில்லை. முடியுமான அளவுக்கு அதிக எண்ணிக்கையிலான மின்குமிழ்களை அணைத்துவிடுமாறும் அதனூடாக இந்த முன்னெடுப்புக்கு ஒவ்வொரு நாளும் தொடர்ச்சியாக ஒத்துழைப்பு நல்குமாறும் நாம் அனைத்து இலங்கையருக்கும் அழைப்பு விடுக்கின்றோம்' என்றார்.

Yes FM வானொலியுடன் இணைந்து எக்ஸ்போலங்கா நிறுவனம் Planet Watch பிரசாரத் திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தது. பசுமை சக்தி, போக்குவரத்து, நிலைபேண்தகு அபிவிருத்தி, அழிவடையாமல் காத்தல் மற்றும் உயிரியல் பல்வகைமை, மீள்சுழற்சிக்கு உட்படுத்தல் மற்றும் வீண்விரயத்தை கட்டுப்படுத்தல் போன்ற அதிக எண்ணிக்கையிலான விடயதானங்கள் தொடர்பில் விழிப்புணர்வை கட்டியெழுப்புவதை மையமாகக் கொண்டதொரு பிரசாரத் திட்டாக இது திகழ்கின்றது. வெகுஜன ஊடகங்களும் புவி மணித்தியாலத்தின் பெறுமதியை நேயர்களுக்கு எடுத்துரைப்பதில் ஈடுபட்டதுடன், எக்ஸ்போலங்காவின் புவி மணித்தியாலத்திற்கான பேஸ்புக் சவாலை நேயர்களிடம் கொண்டுசேர்க்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளன.

'எக்ஸ்போலங்கா நிறுவனமானது சூழல் பாதுகாப்பில் முன்னோடியாக செயற்படுவது மட்டுமன்றி, புவி மணித்தியாலம் முன்னெடுப்புடன் முதன்முதலாக ஒன்றிணைந்த கூட்டாண்மை நிறுவனங்களுள் ஒன்றாகவும் திகழ்கின்றது. சுற்றாடலுடன் தொடர்புள்ள பல்வேறு வகையான  செயற்றிட்டங்களில் நாம் தடம் பதித்திருக்கின்றோம். 'கார்பன் நடுநிலை' சான்றுபடுத்தலைப் பெற்றுக்கொண்ட இலங்கையின் முதலாவது சரக்கு சேவை மற்றும் உபகரண வழங்கல் கம்பனியாக திகழ்தல், மரம் நடுகை பிரசார செயற்றிட்டங்கள், உள்ளக கம்பனிகளில் சக்தி பாதுகாப்பு ஆய்வினை மேற்கொள்ளல், நீரைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித்திட்டங்கள் போன்றவை அவ்வாறான செயற்றிட்டங்களுள் குறிப்பிடத்தக்க சிலவாகும். இது தொடர்பில் நாம் தொடர்ச்சியாக விழிப்புணர்வை கட்டியெழுப்புவதுடன், பொறுப்புணர்வுள்ள கூட்டாண்மை பிரஜை என்ற வகையில் இப்பணியில் முன்னின்று செயற்படுவோம்' என்று வீரசேகர கூறி முடித்தார்.

புவி மணித்தியாலம் (Earth Hour) என்பது, காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடும் முகமாக முன்னெடுக்கப்படும் உலகின் மிகப் பெரிய தன்னார்வ சூழல் நலன்பேண் பிரசார நடவடிக்கையாகும். இந்நடவடிக்கை 2013 மார்ச் 23ஆம் திகதி இரவு 8.30 மணி முதல் 9.30 மணி வரை இடம்பெற்றது. இந்த முன்னெடுப்புக்கு ஆதரவு நல்குவதற்கான சமிக்ஞையாக, அவசியமற்ற வகையில் ஒளிரும் மின்குமிழ்களை அணைத்து விடுமாறு ஒவ்வொரு நபரும் விநயமாக வேண்டிக் கொள்ளப்பட்டனர். WWF அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்ட புவி மணித்தியாலம் நிகழ்வை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஒரு தேசிய பங்காளராக எக்ஸ்போலங்கா நிறுவனம் ஒன்றிணைந்ததன் மூலம், இந்த சர்வதேச முன்னெடுப்பில் இலங்கையும் அங்கம் வகிக்கின்றது.  

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .